மறுபடியும் முதலில் இருந்து “இம்சை அரசன் 24ஆம் புலிகேசி ” என்ன சொல்கிறார் சிம்பு தேவன்??

0
169

வைகை புயல் வடிவேலுவின் நடிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்த படம் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பியது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் சிம்பு தேவன் புகழ் பெற்றார். இந்த படத்தின் இரண்டம் பாகத்தை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பல்வேறு வேலைகள் துவங்கின. முதல் பாகத்தை போன்றே வடிவேல் நாயகனாக நடிக்க ஷங்கர் இந்த படத்தையும் தயாரித்தார். படப்பிடிப்பு துவங்கிய சில தினங்களிலே வடிவேலுவுக்கும், இயக்குனர் சிம்பு தேவனுக்கும் சில பிரச்சனைகள் ஏற்பட அதனால் படத்தில் தன நடிக்க மாட்டேன் என வடிவேல் கூறிவிட்டார்.

இதனால் சிம்பு தேவன் தயாரிப்பாளர் சங்கத்தை நாடினார். ஆனால் அங்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து சிம்பு தேவன் தன அடுத்த பட வேளையில் தீவிரமாக இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது தனது த்விட்டேர் பக்கத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி திரைப்படம் மீண்டும் முதலில் இருந்து படமாக்கப்படும் என்று அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here