மசூதியில் பாரம்பரிய சடங்குகளுடன் நடந்த இந்து திருமணம்…கொண்டாடிய நெட்டிசென்கள்…

0
22

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றதற்கு, பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் இந்த அஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்ப தந்தையை இழந்த அஞ்சுவுக்கு, 2 சகோதரிகளும் உண்டு. கணவரை இழந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த அஞ்சுவின் தாய் பிந்து தனது மகள் திருமணத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என, செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை பிந்து நாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி திருமணத்தில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கான சைவ உணவையும் மசூதி நிர்வாகமே ஏற்பாடு செய்தது.மதநல்லிணக்கத்துக்கு சான்றாக நிகழ்ந்த இந்த திருமணம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.இந்த திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கும் நிலையில், அப்படிப்பட்ட தடைகளை உடைக்க இந்த மக்கள் உதாரணமாகியுள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்த இந்த திருமணம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பலரும் இந்த உறவு இப்படியே நீடிக்க வேண்டும் என்று கருத்து கூறியுள்ளனர்.உலகம் முழுவதும் ட்ரெண்ட் ஆகியுள்ள மணமக்களுக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன