விஜய் சேதுபதியின் படத்தில் நாயகியாகும் ஜிவி பிரகாஷின் தங்கை!!!

0
129

தற்போது விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த படத்தினை விருமாண்டி இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு க/பெ.ரணசிங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் போலீஸ் வேடத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கையான பவானி ஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கப்போகிறார் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.