பெரும் சர்ச்சையை கிளப்பிய காட்மேன்…டேனியல் பாலாஜி இந்துவா கிருஸ்துவரா..?

0
65

நடிகர் டேனியல் பாலாஜி தனது நடிப்பினை சின்னத்திரை சீரியல்கள் மூலம் தொடங்கியவர். ஏப்ரல் மாத்தைல் திரைப்படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவர், காதல் கொண்டேன், காக்க காக்க ஆகிய படங்களில் போலீஸாக நடித்து தன திறமையை வெளிப்படுத்தினார்.

பின், மீண்டும் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து மிகவும் அறியப்பட்ட முகமாக கோலிவுட்டில் வலம் வந்தார். பின் பல எதிர்மறையான வேடங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அவர், கடைசியாக தமிழில் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தில் நடித்த்ருந்தார்.

‘காட்மேன்’ என்ற வலைதளத் தொடரில் ஒரு பிராமண சன்யாசியாக காட்ட முயற்சிக்கும் ஒரு திருடனை நடிப்பதற்காக கடந்த சில நாட்களாக பாலாஜி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி, சர்ச்சையில் சிக்கியுள்ளார். காட்மேன் டீஸர் மத காட்சிகளை மட்டுமல்ல, வெளிப்படையான பாலியல் காட்சிகளையும் கொண்டிருந்தது. டேனியல் பாலாஜி என அழைக்கப்படுவதால், ஒரு கிறிஸ்தவர் ஒரு இந்து கடவுளின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என்று டிரோல் செய்யப்பட்டு இன்னும் பலரது கோபத்து ஆளாகியுள்ளார்.

ஆனால், டேனியல் பாலாஜி உண்மையில் ஒரு இந்து. அவரது அசல் பெயர் பி.சி. பாலாஜி ஆகும். தொண்ணூறுகளில் ராதிகா சரத்குமாரின் ‘சித்தி’ சீரியலில் அவர் முதல்முரையாக நடித்தார். அதில் ‘டேனியல்’ என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததன் காரணமாக, டேனியல் என்ற பெயர் அவரது அடைமொழியாக அமைந்து.