கார்த்திக் நரேன் பெயரில் நடந்த மிகப்பெரிய மோசடி: திடுக்கிடும் தகவல்

0
75

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக இருந்த கவுதம் வாசுதேவ் மேனன் படத்திலிருந்து விலகினார். பின்னர் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் திரைக்கு வரவில்லை.

இதையடுத்து அருண் விஜய்யை நாயகனாக வைத்து மாஃபியா என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 43-வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தகவல் பகிர்ந்திருக்கும் கார்த்திக் நரேன், எனது புதிய படத்தில் நடிக்க வைப்பதாகக் கூறி, எனது பெயரை தவறாக பயன்படுத்தி பொய்யான தகவலை பரப்பி பணம் கேட்டு வருகிறார்.உங்களுக்கு 9777017348 என்ற வாட்ஸ் அப் நம்பரில் இதுபோன்ற தகவல் வந்தால் அதை பிளாக் செய்து விடுங்கள். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் நரகத்தில் எரிக்கப்படுவார்” என்று கூறியுள்ளார்.