மீண்டும் ஒரு ரிலீஸ் தேதியை அறிவித்த எனை நோக்கை பாயும் தோட்டா!!

0
153

தனுஷ் நடிப்பில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாகவும், சசிகுமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படமானது, பல பிரச்சனைகளை கடந்து ரிலீசாகாமல் இருந்து வருகிறது.

கடைசியாக இப்படத்தின் நிதி பிரச்சனையை தீர்த்து செப்டம்பர் 6 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதற்கான ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடை பெற்றன. ஆனால் கடைசி நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னொரு புதிய பிரச்சனையால் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் இப்பட ரிலீஸ் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.நிதிப் பிரச்சனை அனைத்தும் முடிந்துவிட்டன. அதனால் படம் செப்டம்பர் 12ம் தேதி இப்படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என படக்குழு சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.