சந்தானம் ஹீரோவாக அசத்தும் டகால்டி படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

0
64

சந்தானம் பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து பின்னர் காமெடியனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் காமெடியனாக பல படங்களில் நடித்து விட்டார். இவரின் காமெடியக்கே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்நிலையில் ஒரு படி மேலே போய் ஹீரோ வாக உருவெடுத்துவிட்டார். அடுத்தடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்துவரும் இவர் தற்போது காமெடியனாக நடிப்பதையே நிறுத்தி விட்டார். தற்போது இவர் நடிப்பில் கடைசியாக தில்லுக்கு துட்டு 2 திரைப்படம் வெளியானது. அதுமட்டுமல்லாமல் A 1 மற்றும் சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் தற்போது இவர் டகால்டி என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆனந்த் இந்த படத்தினை இயக்குகிறார். ஹாண்ட் மேடு பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. யோகி பாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here