சார்லி சாப்ளின்-2 படத்தின் விமர்சனம்!! மீண்டும் ஒரு சின்ன கலகலப்பு!!

0
462

சார்லி சாப்லின் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது .படத்தில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஆதா ஷர்மா மற்றும் பிரபு ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர்.

படம்:- சார்லி சாப்ளின் 2
இயக்குனர்:- ஷக்தி சிதம்பரம்
நடிகர்கள் : – பிரபு தேவா, நிக்கி கல்ராணி, பிரபு, அதா ஷர்மா, அமித் பார்கவ்
தயாரிப்பு: –  அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம்
இசையமைப்பளார் :- அம்ரீஷ் கணேஷ்
வெளியான தேதி : 25-01-2019

படத்தின் கதைக்களம்

படத்தின் ஹீரோ வழக்கம்போல் பிரபுதேவா தான். இந்த படத்தில் அவர் திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆனால் இதில் முரண் என்னவென்றால் திருமண தகவல் மையம் நடத்தி வரும் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான். ஒரு கட்டத்தில் நடிகர் பிரபுவின் மகள் நிக்கி கல்ராணியை சந்தித்து காதலில் விழுகிறார் பிரபுதேவா. நன்றாக சென்று கொண்டிருக்கும் காதலில் திடீரென இடையில் அதா சர்மா வந்து நுழைகிறார்.

இதனால் நிக்கி கல்ராணிக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு விடுகிறது அடிக்கடி இந்த சந்தேகம் தொடர இருவரும் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுக்கின்றனர். பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் சென்று திருப்பதியில் திருமணம் செய்கின்றனர். இதற்காக பிரபுதேவா குடும்பமும் நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்கு செல்லும் போது நடக்கும் கலகலப்பான காமெடி தான் படத்தின் மொத்த கதையும்.

படத்தின் பாசிட்டிவ்

கமர்சியல் படம் என்பதால் பெரிதாக படத்தை பார்க்க மெனக்கெடத் தேவையில்லை. உட்கார்ந்து பார்த்தால் போதும் அளவிற்கு தான் இருக்கிறது படத்தில். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிளஸ் பாயிண்ட் எதுவும் இல்லையென்றாலும் பிரபுதேவாவின் நடனமும் அம்ரீஷ் கணேஷ் இசையும் நன்றாக இருக்கிறது.

நெகட்டிவ்

கமர்ஷியல் படம் என்பதால் முன்னரே வந்த ஒரு கதையின் மீண்டுமோர் மூறை அரைத்த மாவையே அரைப்பது போல் தான் உள்ளது. படத்தின் முதல் பாகத்தில் காமெடிகள் நன்றாக இருந்தாலும் இரண்டாம் பாகத்தில் பெரிதாக சிரிக்கும்படி இல்லை எனலாம். மேலும் திருப்பதிக்கு சென்ற பின்னர் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் உங்களை சீரியல் பார்ப்பது போல் கொண்டு சேர்த்துவிடும்.

படத்தின் மதிப்பு 2.5/5 கொடுக்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here