தனுஷ் வெளியிட்ட பிரம்மாஸ்திரா தமிழ் லோகோ —மஹாபாரத்தின் பயங்கரமான ஆயுதம்..

0
472

அயன் முகர்ஜி இயக்கும் இப்படத்துக்கு ‘பிரம்மாஸ்திரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், அலியா பட், மவுனி ராய் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா. சூப்பர் ஹீரோ பேன்டஸி படமாக உருவாகும் இதை கரண் ஜோஹர் தயாரிக்கிறார். 2019-ம் ஆண்டு டிசம்பர் வெளியீடாக வர இருக்கிறது.

மார்ச் 4 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்ப மேளாவில் பிரம்மாஸ்திரா திரைப்பட குழுவினர் ரன்பீர் கபூர் , ஆலியா பட் ,அயன் முகர்ஜி, ஆகியோர் வானத்தில் ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மூலம் பிரம்மாஸ்திரா படத்தின் லோகோவை வெளியிட்டனர்.

தற்போது இந்த படத்தின் தமிழ் லோகோவை தனுஷ் வெளியிட்டுள்ளார்.ஆயுதங்களின் ஆண்டவன் என்ற அடைமொழியோடு இந்த லோகோ உள்ளது.பாகுபலி போல் மேலும் ஒரு கதை உருவாகுமா என்று படத்தை பார்த்தால் தான் தெரியும்.