தனது காதலரின் புகைப்படத்தை முதன் முறையாக காண்பித்த பிக் பாஸ் ஐஸ்வர்யா…

0
166

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் “அலேக்கா” நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் காதலில் இருப்பதாக மிக சூசகமாக தெரிவித்துள்ளார்.அவர் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் அதற்கு சமீபத்தில் விடை கிடைத்துள்ளது.சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆண் நபருடன் தனிமையில் இரவு பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில் பகிர்ந்துள்ளார்.

அந்த நபர் பெயர் கோபி.ஏற்கனவே ஐஸ்வர்யா தனது கைவிரலில் கோபி என்ற பெயரைத்தான் பச்சை குத்திக் கொண்டுள்ளார். இதனால் அவர் காதலிக்கும் நபர் இந்த கோபி தான் என தெரியவந்துள்ளது.ஐஸ்வர்யா காதலித்து வருவதாக கூறப்படும் கோபி பண மோசடி வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.