ஸ்பேனிஷ் மொழி படத்தின் ரீமேக்கில் நடிக்கப்போகும் அனுஷ்கா…

0
46

அனுஷ்கா தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் முன்னணி நாயகியாகவே வளம் வருகிறார். சமீபத்தில் உடல் எடை கூடியதால் நடிக்காமல் இருந்த இவர் தற்போது நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஹேம்நாத் மதுக்கர் இந்த படத்தினை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர்.

ஜூலியாஸ் ஐஸ் என்ற ஸ்பேனிஷ் மொழி படத்தின் கதையை இயக்குனர் அனுஷாவிடம் கூற அது பிடித்துப்போய் உடனே ஓகே சொல்லிவிட்டார் அனுஷ்கா. இந்த படத்தில் அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here