ஒரு கோடியை தொட்ட அனுஷ்கா–புதிய சாதனை…

0
208

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா.ரசிகர்களுடன் நெருக்கத்தை உருவாக்க பிற திரையுலக நடசத்திரங்களைப் போல, அனுஷ்காவும் 5 ஆண்டுகளுக்கு முன், முக நூல் பக்கம் துவக்கினார். நாளுக்கு நாள், அனுஷ்காவை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, இப்போது, ஒரு கோடியை எட்டியுள்ளது.திரையுலகை சார்ந்த பல பிரபலங்களுக்கு கூட இந்த அளவிற்கு ரசிகர்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.