அதர்வா உடன் இணையும் அனுபமா!!! வெளிவந்தது அடுத்த படத்தின் அறிவிப்பு..

0
96

அதர்வா நடிப்பில் சமீபத்தில் 100 திரைப்படம் வெளிவந்தது. இது வெளியாகி மக்களிடையே ஓரளவு கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்டேன் காதலை, சேட்டை, ஜெயம் கொண்டான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் அந்த படத்தை இயக்கியுள்ளார். இதற்க்கு முன் இவர்கள் இணைந்து பூமராங் படத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இணைவது இதுவே முதல் முறை. இந்த படத்தின் படப்பிடிப்பானது வரும் 15 ஆம் தேதி முதல் சென்னையில் படமாக்கப்பட உள்ளது. முழுக்க முழுக்க காதல் சார்ந்தது இந்த படம் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது அதர்வா வால்மீகி படத்தில் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here