கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இதல்லாம் தேவையா–வைரலாகும் ஏமி ஜாக்சன் புகைப்படம்

0
243

மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் ஏமி ஜாக்சன். பின்பு ‘ஐ’, தெறி, தங்கமகன், 2.O, ஆகிய படங்களில் நடித்தார். தமிழ்,தெலுங்கு, இந்தி என எல்லா மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். 2.O படத்திற்கு பிறகு வேறு எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் இருந்த ஏமி லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜை காதலித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 31ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஏமி ஜாக்சன் தான் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ஏமியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, ‘கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இதுபோன்று உடற்பயிற்சி எடுக்க வேண்டாம். உடல் நலத்தை பாதிக்கும். இந்த சமயத்தில் நீங்கள் ஓய்வெடுங்கள் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஏமி ஜாக்சன்- ஜார்ஜ் ஜோடியின் திருமணம் 2020ஆம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடக்க இருக்கிறது.