ஊரடங்கில் அஜித்துடன் ஃபோனில் பேசிய ரஜினி..?வெளியான தகவல்

0
41

‘தல’ அஜித் தனது நடிப்பாலும் பண்பாலும் விசுவாசமான ரசிகர்களை வென்றுள்ளார். அவரது திரைப்பட வெளியீடுகளின் போது ரசிகர்களால் ஒரு பெரிய திருவிழா கொண்டாட்டம் இருக்கும். அஜித் ஒரு நட்பான நடிகர் என்பது எலோருக்கும் தெரியும், அவர் ஏராளமான நண்பர்களை சம்பாதித்துள்ளார். ஆனால் அவர் சமூக ஊடகங்களிலிருந்து, சில பொது நிகழ்ச்சிகளிலிருந்தும் இருந்தும் விலகி இருக்கிறார். அவர் நடிக்கும் திரைப்படத்தின் ப்ரொமோஷனாக இருந்தாலும் அதில் கலந்துகொள்வதில்லை. ஆனால், தனது வேலையை சிறப்பாக முடித்துவிடிவார். மற்றதை படக்குழுவும், படத்தின் வெற்றியை அவரது அன்பான ரசிகர்களும் பார்த்துக்கொள்வார்கள்.

இப்போது சமீபத்திய சலசலப்பு என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ‘தல’ அஜித் சிறப்பு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ரஜினிகாந்த் சமீபத்தில் சினிமாவில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தார். ரசிகர்கள் இந்த சிறப்பு நிகழ்வை சமூக ஊடகங்களில் சிறப்பாக கொண்டாடினர். அதற்கு பதிலளித்த அவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, ரசிகர்கள் இல்லாமல் அவர் ஒன்றும் இல்லை என்று கூறினார்.

ரஜினிகாந்தின் சிறந்த பின்தொடர்பாளர் என்று அஜித்தை கூறலாம். அவர் 2007-ஆம் ஆண்டில் ரஜினியின் ‘பில்லா’ படத்தை ரீமேக் செய்திருந்தார். அவரது ‘ஜானி’ திரைப்படத்தையும் அஜித் ரீமேக் செய்ய விரும்பியதாக சமீபத்தில் தெரியவந்தது.

இப்போது, அஜித் ரஜினிகாந்தை அழைத்ததாகவும், சினிமாவில் அவரது மகத்தான பயணத்தை வாழ்த்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு நட்சத்திரங்களும் தொலைபேசியில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் உரையாடியுள்ளதாகவும், அஜீத் ரஜினிகாந்தின் சினிமா வாழ்க்கையிலிருந்து பல ரகசியங்களை சேகரித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.