விஜய் ஆண்டனி – அருண் விஜய் இணைந்த அக்னிசிறகுகள் படத்தின் தற்போதைய நிலை…

0
306

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது வெளியான கொலைகாரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து அவர் நவீன் இயக்கத்தில் அக்னிச்சிறகுகள் என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் இணைந்து அருண் விஜயும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகியான ஷாலினி பாண்டே இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டன.

இந்நிலையில் இதன் முன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதனை ஐரோப்பா நாட்டில் படம்பிடிக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த படப்பிடிப்பானது 50 நாட்களுக்குள் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளனர். பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.