“சத்யராஜ் மாம்ஸால போயடுச்சு” என ரசிகரின் கமெண்ட்க்கு பதிலடி கொடுத்த விசித்ரா..

0
433

990-களில் தமிழ் திரையுலகில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.தமிழில் பல்வேறு படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

‘ரசிகன்’, ‘முத்து’, ‘வில்லாதி வில்லன்’, ‘வீரா’, ‘அமைதிப்படை’ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார். ஆனால், 2000-த்துக்கு பிறகு நடிப்பிற்கு முழுக்குப் போட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

தற்போது புதிதாக ட்விட்டர் இணையத்தில் இணைந்துள்ளார் விசித்ரா. சமீபத்தில் எடுத்த போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்தார்.அப்புகைப்படத்தைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், “தமிழ்ல முன்னனி கதாநாயகியா வந்திருக்க வேண்டியது, சத்யராஜ் மாம்ஸால போயடுச்சு” என்று தெரிவித்தார். இவருக்கு பதிலளிக்கும் விதமாக, “சத்யராஜ் சார் எப்போதுமே என் திறமை மீது நம்பிக்கை கொண்டவர்.

இயக்குநராக அவதரித்த அவரது முதல் முயற்சியில் உருவான ‘வில்லாதி வில்லன்’ திரைப்பட்டத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தைக் கொடுத்திருந்தார். ஆனால், அந்த வேளையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒரே மாதிரியான படங்களின் போக்கு என்னை சில நல்ல பாத்திரங்களை ஏற்கவிடாமல் தடுத்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார் விசித்ரா.