தமிழில் வாய்ப்பு இல்லாததால் மலையாள படங்களில் நடிக்கும் நடிகை சோனா….

0
685

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக நடிப்பவர் சோனா. இவர் மிருகம், குசேலன், குரு என் ஆளு, அழகர் மலை, ஒன்பதுல குரு, யாமிருக்க பயமே உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமீபமாக சோனாவுக்கு புதிய வாய்ப்புகள் இல்லை. தற்போது அவதார வேட்டை என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்துவருகிறார்.

இதுகுறித்து நடிகை சோனா கூறியதாவது “எனக்கு கவர்ச்சியாக நடித்து சலிப்பு ஏற்பட்டு விட்டது. ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்த்து சலிப்படைந்து இருப்பார்கள். இதனால் இனிமேல் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது என்றும் முடிவு செய்தேன். நான் கவர்ச்சியாக நடிக்க மறுத்த பிறகு புதிய படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை.

இதனால் 2 வருடங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தேன். அதுபற்றி கவலைப்படவில்லை. இப்போது மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறேன். மலையாள படம் என்றதும் தவறாக நினைக்க வேண்டாம். அங்கு நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைகின்றன. குணச்சித்திர வேடங்களில்தான் நடிக்கிறேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் அவதார வேட்டை படத்தில் பவர் ஸ்டாருடன் வில்லியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்துக்கு பிறகு வில்லியாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அழைக்கின்றனர். தொடர்ந்து வில்லியாக நடிக்க ஆசை இருக்கிறது.” இவ்வாறு சோனா கூறினார்.