கோவை போலீஸில் புகார் கொடுத்த நடிகை ஸ்ருதி…?

0
241

திருமண மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும், நடிகை ஸ்ருதி, சமூக வலைதளங்களில் தன்னுடைய வீடியோக்கள், புகைப்படங்களை அனைத்தையும் அகற்ற வேண்டும்’ என்று கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகைப்படம் மற்றும் விடீயோக்களால் தனது திருமணம் தடைபடுவதாகவும் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர், ஸ்ருதி. இவர் நடித்த, ஆடி போனா ஆவணி, சோழவம்சம்’ ஆகிய இரண்டு படங்களும் வெளிவராத சூழலில், கடந்த ஆண்டு திருமண மோசடி வழக்கில் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டார். ` திருமணத்துக்கு மணமகன் தேடுவதாகத் தனது புகைப்படத்தை வரன்தேடும் இணையதளங்களில் பதிவுசெய்து,

அந்த புகைப்படங்களில் மயங்கி, தன்னைத் தொடர்புகொள்ளும் பணக்கார இளைஞர்களைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டினார் என்பது இவர் மீதான குற்றசாட்டு.