அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட மாணவன்

0
102

நேர்கொண்ட பார்வை படம் இன்று வெளியாகிய நிலையில்,விடுமுறை வேண்டி மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது வைரலாகி வருகிறது.திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஸ்டாராகவும் வலம் வருபவர் அஜித். அவர் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வெளியாகியுள்ளது.பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தை வரவேற்கவும், கொண்டாடவும் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அதனால் திரையரங்குகளும் விழாக்கோலம் பூண்டுள்ளன.நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் நேர்கொண்ட பார்வை படம் பார்ப்பதற்காக தனது துறைத்தலைவரிடம் விடுமுறை கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மாணவரின் கோரிக்கையைப் பார்த்து கடுப்பான ஆசிரியர், கடிதத்தை நிராகரித்து பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இந்தக் கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆனால் அந்த மாணவர் நாளை தனது நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க போவதாகவும் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here