சற்றுமுன் வந்த நடிகர் அபிசரவணன் நடிகை அதிதி மேனன் திருமண வீடியோ

0
158

நடிகர் அபிசரவணன், போலி திருமண சான்றிதழ்களை வைத்து தன்னை மிரட்டுவதாக நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதற்கு பதில் அளித்து அபிசரவணன் கூறியதாவது:-

“நடிகை அதிதிமேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மை. 2016 ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து 3 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். நான் வெளியூர் சென்றபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை அள்ளிக்கொண்டு என்னை பிரிந்து சென்றுவிட்டார். அதிதி மேனனை என்னுடன் சேர்த்து வைக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

திருமணம் நடக்கவில்லை என்றும், போலி பதிவு திருமண சான்றிதழ் வைத்து நான் மிரட்டுவதாகவும் அவர் கூறுவதில் உண்மை இல்லை. திருமணம் ஆனதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என தனது திருமண விடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் அபிசரவணன்.