2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம்!!!

0
176

ஹாலிவுட் படங்களை பொறுத்தவரையில் வனவிலங்குகளை வைத்து படம் எடுப்பது சாத்தியம். ஆனால் நம் தமிழ் படங்களை பொறுத்தவரையில் அது மிகவும் அரிதே. பெரும்பாலும் அப்படிப்பட்ட காட்சிகளை கிராபிக்ஸ் செய்தே படமாக்கப்படும். ஆனால் தற்போது திரைக்கு வரவிருக்கும் ஆண்கள் ஜாக்கிரதை என்ற படத்தில் 2000 முதலைகளை நடிக்கவைத்துள்ளார்களாம்.

இதற்காகவே படக்குழு கிட்டத்தட்ட 1 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளனர். இதற்கென தனியாக மாமிசவுணவு வழங்குவது மற்றும் பராமரிப்பிற்கே அதிகமாக செலவு செய்தோம் எனவும் இயக்குனர் முத்துமனோகரன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படமானது பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால் ஏற்படும் தீமைகளை மையப்படுத்தி உருவானதாகவும் கூறினார்.

அதிலும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் 2000 முதலைகளும் ஒன்றாக வரும் காட்சிகளை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் கொலைநடுங்கிவிடும் எனவும் தெரிவித்தார்.