ஆதி நடிக்கும் “கிளாப்” படத்தின் படப்பிடிப்பு துவங்கியது…

0
166

ஆதி தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். அதிலும் தமிழில் இவர் நடித்த ஈரம், மரகத நாணயம் போன்ற திரைப்படங்கள் இவருக்கு மாபெரும் வெற்றியினை தந்தது. எனவே இவருக்கு இரண்டு மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது. கடைசியாக தமிழில் இவர் யு டர்ன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது விளையாட்டை மையப்படுத்திய தனது 21வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கிளாப் என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தினை பிரித்வி ஆதித்யா இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகிறது. பிக் பிரிண்ட் பிகிடுறேஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. கனக்ஷா சிங் இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இதில் இசைஞானி இளையராஜா மற்றும் நானி ஆகியோர் கலந்து கொண்டனர்.