Connect with us

மதுபானம் வாங்க கூட்டத்தில் நின்ற நபருக்கு கொரோனா…!வெளியான அதிர்ச்சி தகவல்

Featured

மதுபானம் வாங்க கூட்டத்தில் நின்ற நபருக்கு கொரோனா…!வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தை பொறுத்தவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் அரசின் டாஸ்மாக் கடைகள் கட்டுப்பாடுகளுடன் நேற்று திறக்கப்பட்டன. அதன் மூலம், நேற்றும், இன்றும் மட்டும் சுமார் ரூ.300 கோடி வரை தமிழக அரசு வருவாய் ஈட்டியது.

அதே வேலையில் சென்னை, கோயம்பேட்டில் பணியாற்றி வந்த, தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் கிராமத்தை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சேர்ந்தமரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டு காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட நேரம் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி சென்றதும் தெரிய வந்துள்ளது.
மே 17ஆம் தேதி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதுவரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top