மீண்டும் தாயாகிறார் சமீரா ரெட்டி – லேட்டஸ்ட் புகைப்படம் உள்ளே!!

0
173

“வாரணம் ஆயிரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய சமீரா ரெட்டி அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக விஷாலுடன் வெடி, மாதவனுடன் வேட்டை மற்றும் அஜித்துடன் அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் மூன்றிலும் படு பிசியாக இருந்த சமீரா ரெட்டி, 2014ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை மணந்தார். அடுத்த ஒரு வருடத்திலேயே அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது இது அனைவரும் அறிந்த ஒன்று.

அதன் பிறகு தற்போது ஐந்து ஆண்டுகள் கழித்து தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இரண்டாவது குழந்தைக்கு தாயாக போவதை அனைவருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் சமீரா ரெட்டி.

இன்ஸ்டாகிராம் பதிவு: