தென்னிந்திய சினிமா குறித்து கேலி செய்த தொகுப்பாளரை ஒரே பதிலால் வாயடைத்து போகவைத்த ராணா!!

0
181

ராணா பாகுபலி திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து நம் அனைவரையும் கவர்ந்தவர். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக விளங்கும் இவர் தமிழ் ஆரம்பம், பெங்களூர் நாட்கள் போன்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது சாய் பல்லவியுடன் ஜோடியாக படத்தில் நடித்துவருகிறார் இவர்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் தொகுப்பாளர் நான் தென்னிந்திய சினிமா பார்த்ததே கிடையாது. ரோஜா மட்டும் தான் பார்த்திருந்தேன். அதன் பின் என் அம்மா சொன்னதால் தான் பாகுபலி திரைப்படத்தையே பார்த்தேன் எனவும் கூறினார்.

இதற்க்கு பதிலளித்த ராணா சினிமாவை பெரிது பார்ப்பதற்கெல்லாம் ஒன்றும் கெடையாது. ரஜினிகாந்தின் படங்கள் அணைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகிறது. அவெஞ்சர்ஸ் படமெல்லாம் நம்ம ஊரில் சூப்பர் ஹிட் . சினிமாவை பிரித்து எல்லாம் பார்க்கக்கூடாது. தமிழில் வந்தால் தமிழ் படம் அதுவே தெலுங்கில் வந்தால் தெலுங்கு படம் அவ்வளவுதான். இதனால் படத்தின் கதை ஒன்றும் மாறிவிடாது என கூறி தொகுப்பாளரை வியக்கவைத்தார்.