92 பந்துகளில் 107 ரன்கள் விளாசிய நடிகர்–வாட் எ மேன் என்று பாராட்டிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்.

0
190

சினிமாவைத் தாண்டி, கிரிக்கெட் விளையாட்டில் அதிகம் ஆர்வமுடையவர் நடிகர் விக்ராந்த். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) என்கிற, நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை ரைனோஸ் அணிக்காக விளையாடுவார். அவரின் ஆட்டத்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோஸியேஷன் நடத்தும் நான்காவது டிவிஷன் போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. அதில், விக்னேஷ்வரா கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடிவருகிறார், விக்ராந்த். நேற்று நடைபெற்ற போட்டியில், 92 பந்துகளில் 107 ரன்கள் குவித்து, அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறார். இவரின் இந்த அதிரடி விளையாட்டை ட்விட்டரில் பாராட்டிவருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், ” what a man and a timely knock for our team ” என்று ட்வீட் செய்துள்ளார். விக்ராந்த், சினிமாவில் கவனம் செலுத்திக்கொண்டே, தான் அதீத ஆர்வம் செலுத்தி வரும் கிரிக்கெட்டிலும் அசத்திவருகிறார் என்று பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளன. இவரது நடிப்பில் ‘பக்ரீத்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.