Connect with us

புதிதாக பரவும் ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ்…ஊரடங்கு தளர்த்துவதில் பின்வாங்கிய அரசு

Featured

புதிதாக பரவும் ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ்…ஊரடங்கு தளர்த்துவதில் பின்வாங்கிய அரசு

இந்தியாவில் தற்பொழுது டெல்டா வைரஸின் பரவல் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது .மேலும் இது முந்தைய வைரஸை விட 60 சதவீதம் அதிகமாக பரவ கூடியது என்பதால் சுகாதாரத்துறை எச்சரித்து வருகின்றனர்.மேலும் இது இம்யூனிட்டி அளவு எவ்வளவு தான் அதிகமாக இருந்தாலும் அதை மீறி பரவும் எனவும் எச்சரித்து உள்ளனர்.

இந்நிலையில் பிரிட்டனில் ஏற்கெனவே போடப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நோய்த்தொற்று குறைந்ததால் படிப்படியாக அவை தளர்த்தப்பட்டன. தற்போது பரவும் உருமாறிய புதிய ‘டெல்டா’ வகை கொரோனா வைரஸ் மேலும் உருமாறிய வகையாக உருவெடுத்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் தளர்க்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை அதிவேகமாக பரவும் புதிய டெல்டா பிளஸ் வகையால் தளர்வுகளை முழுமையாக தளர்த்தும் திட்டத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒத்திவைத்துள்ளார்.

வரும் ஜூன் 21ஆம் தேதி முதல் ஊரடங்கை முழுவதுமாக தளர்த்திவிட்டு பப்கள், ரெஸ்டாரண்டுகள், இரவுக் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை முழுமையாக திறக்க அனுமதிக்கலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த திட்டத்தை ஜூலை 19 வரை ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Featured

To Top