Connect with us

#BREAKING : சென்னையில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் காலமானார்..!!

Kodiyeri_Balakrishnan

General News

#BREAKING : சென்னையில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் காலமானார்..!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவும், கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளருமான கொடியேரி பாலகிருஷ்ணன் சென்னையில் இன்று காலமானார்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். 2006 முதல் 2011 வரை விஎஸ் அச்சுதானந்தன் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய பாலகிருஷ்ணன், 2015ல் கட்சியின் மாநிலச் செயலாளராக ஆனார்.

முன்னதாக இன்று பாலகிருஷ்ணன் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் நாளை தொடங்கவிருந்த தனது ஐரோப்பா பயணத்தை ஒத்திவைத்தார். பாலகிருஷ்ணனை நாளை நேரில் சந்திக்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது கொடியேரி பாலகிருஷ்ணன் காலமான செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in General News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top