Connect with us

“இருக்குமோ.. ஒருவேளை இருக்குமோ..! திடீரென ஜெயம் ரவியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!”

Cinema News

“இருக்குமோ.. ஒருவேளை இருக்குமோ..! திடீரென ஜெயம் ரவியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!”

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜுடன் இணைந்துள்ளார். ‘சைரன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியானது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். இதனையடுத்து ஜெயம் ரவி, ஒரு கல் ஒரு கண்ணாடி பட இயக்குநர் M ராஜேஷ் இயக்கத்தில் நடுக்க உள்ளார். பிரதர் என பெயரிடப்பட்டுள்ள பட போஸ்டர் நேற்று வெளியானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் “பிரெத் ஆப் டெஸ்டினி’ என்ற சீன வெப் சீரிஸின் போஸ்டரை போல் இருப்பதாக சொல்லி நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், is it an official remake of Breath of Destiny – 2021 Korean film? இல்லன்னா போஸ்டர், கதை ரெண்டையும் சுட்டுட்டீங்களா? சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் கேள்வி.” என குறிப்பிட்டு உள்ளார்.

பிரதர் திரைப்படத்திற்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளார். ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "KGF நடிகர் யாஷ், கூட ஹாலிவுட் டைரக்டர்! ஒருவேளை இருக்குமோ?!"

More in Cinema News

To Top