Connect with us

Bloody Sweet : தளபதி67 ‘லியோ’ ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்த லோகேஷ்..! காரணம் என்ன தெரியுமா..?

Cinema News

Bloody Sweet : தளபதி67 ‘லியோ’ ரிலீஸ் தேதியை இப்போதே அறிவித்த லோகேஷ்..! காரணம் என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் தவரிக்க முடியாத இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் 67ம் படம் தற்போது விறுவிறுப்பாக முழுவீச்சில் உருவாகி வருகிறது. அதன் டைட்டில் இன்று அறிவிக்கப்படும் என படக்குழு சொன்னதால் ரசிகர்கள் எந்த வேலையும் செய்யாமல் வெறித்தனமாக காத்திருந்தனர்.

சொன்னது சொன்னபடி தற்போது ப்ரோமோ வீடியோ உடன் டைட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது . தளபதியின் 67 ஆவது படத்திற்கு ‘லியோ’ என பெயரிட்டு இருக்கின்றனர். விஜய் சாக்லேட் செய்யும் நபராக தான் ப்ரோமோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார் .

அதே போல் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பும் தற்போது வந்திருக்கிறது. தளபதியின் லியோ படம் 2023 ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

19.10.2023ல் நம்ப தளபதியின் லியோ ரிலீஸ் ஆகும் நிலையில், அந்த வார இறுதி நாட்களோடு பண்டிகை விடுமுறையும் இரண்டு நாட்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் சும்மாவே கெத்து காட்டி வரும் லோகேஷ் மற்றும் தளபதியின் ரசிகர்கள் தற்போது வெறித்தனமான கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top