Connect with us

கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க… பணம் பண்ற வேலை …விளாசிய காஜல்

Cinema News

கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க… பணம் பண்ற வேலை …விளாசிய காஜல்

கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அதிகமாக மகாலட்சுமி, ரவீந்தர் திருமணச் செய்தி தான் பேசப்படுகிறது. யாரும் எதிர்பார்க்காத விதமாக காதும் காதும் வைத்தபடி திருப்பதியில் மகாலட்சுமியை திருமணம் முடித்துள்ளார் ரவீந்தர். மேலும் திருமண புகைப்படத்தை ரவீந்தர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், ரவீந்தர் திருமணத்தை விமர்சித்தவர்களுக்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி மகாலட்சுமி – ரவீந்தர் திருமணத்தை ட்ரோல் செய்தவர்களின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல். அதில் ஒருவர், “என்னடா கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க… பணம் பண்ற வேலை” என குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், மனசை மனிபர்ஸுகுள்ள ஒழிச்சி வெச்சிருக்காங்களா என ஒரு பெண் பதிவிட்டதை பார்த்து கடுப்பான காஜல், அவருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளதாவது : “அது எப்டிங்க… நயன் விக்னேஷ கட்டிக்கிட்டாலும் நயன் தான் தப்பு. மஹா ரவிய கட்டிக்கிட்டாலும் மஹா தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தி” என விளாசியுள்ளார். காஜலின் இந்த பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ஆட்டோகிராஃப் படத்தில் விஜயே நடித்திருக்கலாம்..! இயக்குனர் சேரன் சொன்ன விஷயம்! Viral!"

More in Cinema News

To Top