பிக்பாஸ் ஷெரினின் காதலரை பார்த்ததுண்டா!!! இதோ புகைப்படம்…

0
176

தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக பங்கேற்றுள்ளனர் ஷெரின். இவர் தனுஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்தவர். தனது முதல் படமே வெற்றிபெற்றாலும் அதன் பின் அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் விசில், ஜெயா போன்ற படங்களில் நடித்துவந்தார்.

அதன் பின் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாமல் போனதால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தார் இவர். 2015 ஆம் ஆண்டு நண்பேன்டா படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்த இவருக்கு அந்த படத்தின் மோசமான தோல்வியினால் தடம் தெரியாமல் போனார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு ராகுல் பாதிஜா என்ற காதலர் இருக்கிறார். தொழிலதிபரான இவரை ஷெரின் பார்ட்டியில் சந்தித்து பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.