Connect with us

பொருட்களை எல்லாம் போட்டுடைத்து.. பத்ரகாளியாய் மாறிய குயின்ஸி.. தரமான சம்பவம்..!!

Big boss 6

பொருட்களை எல்லாம் போட்டுடைத்து.. பத்ரகாளியாய் மாறிய குயின்ஸி.. தரமான சம்பவம்..!!

பிக்பாஸ் வீட்டில் சாந்த சொரூபியாக இருந்து வந்த குயின்ஸி, இன்று திடீரென கதிரவனுடன் சண்டை போட்டு பொருட்களையெல்லாம் போட்டுடைத்த நிலையில், பிக்பாஸ் தண்டனை வழங்கியுள்ளார்.

கடந்த சில பிக்பாஸ் சீசன்கள் டல்லடித்த நிலையில், இந்த சீசன் ஆரம்பம் முதலே பரபரப்பாக செல்வதால், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் கடைசி வரை இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜிபி முத்து குடும்ப காரணங்களால் தானாக வெளியேறிய நிலையில், இனி பிக்பாஸ் மீண்டும் டல்லடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வித்தியாசமான டாஸ்குகள் மற்றும் அசீம், தனலட்சுமி போன்றவர்களால் நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாகவே சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நீதிமன்றம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க் பரபரப்பாக சென்று கொண்டுள்ள நிலையில், இதில் கதிரவன் மற்றும் குயின்ஸி இடையே இன்று காரசாரமான மோதல் ஏற்பட்டது. இருவருமே இதுவரை சாந்த சொரூபிகளாகவே வலம் வந்த நிலையில், இன்று இருவரும் மோதிக்கொண்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இந்த வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் பிக் பாஸ் வீட்டில் உள்ள பொம்மையை எல்லாம் போட்டு உடைத்து குயின்ஸி ரணகளம் செய்தார். இதனால் பிக்பாஸ் வீடே ரணகளமானது. இதையடுத்து பிக்பாஸ் குயின்ஸியை அழைத்து நீங்கள் இந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு கேமரா முன்பும் சென்று, இனிமேல் பிக்பாஸ் வீட்டு பொருட்களை உடைக்க மாட்டேன் என மன்னிப்பு கேளுங்கள் என்று தண்டனை கொடுத்தார்.

மேலும் கேப்டன் மைனாவிடம், குயின்ஸி சரியாக மன்னிப்பு கேட்கிறாரா என்று பார்க்குமாறும் பிக்பாஸ் கட்டளையிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Big boss 6

Advertisement
 

Trending

 
Advertisement
To Top