Connect with us

என்ன அமுதா இதெல்லாம்.. பாத்ரூமில் எட்டிப் பார்க்கும் வீடியோ..? ரெட் கார்டு கொடுக்க சொல்லும் ரசிகர்கள்..!!

Big boss 6

என்ன அமுதா இதெல்லாம்.. பாத்ரூமில் எட்டிப் பார்க்கும் வீடியோ..? ரெட் கார்டு கொடுக்க சொல்லும் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் வீட்டில், அமுதவாணன் செய்த செயலால் கொதித்துப் போயுள்ள ரசிகர்கள் அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்கள் என சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.

கடந்த சில பிக்பாஸ் சீசன்கள் டல்லடித்தாலும், இந்த சீசன் ஆரம்பம் முதலே ரசிகர்களை ஈர்த்து பரபரப்பாக செல்கிறது. இரண்டாவது வார முடிவில் அனைவரின் பேவரிட்டான ஜிபி முத்து பணம், புகழை விட குடும்பம் தான் முக்கியம் எனக் கூறி தானாக வெளியேறிவிட்டார்.

இதையடுத்து, சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, ஷெரினா மற்றும் நிவாஷினி வீட்டை விட்டு எவிக்சன் மூலம் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 பேர் மல்லுக்கட்டி வருகின்றனர். இதில் கடந்த வாரம் ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்க் ரணகளமாக சென்ற நிலையில், இந்த வாரம் நீதிமன்றம் டாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரம் முதல்முறையாக பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது. இதில் அசீம், அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, கதிரவன், ராம், மணிகண்டன் ஆகியோர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் ரெஸ்ட் ரூமில் அமுதவாணன் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமின் வெளியே நிற்கும் அமுதவாணன், உள்ளே ஒருவர் குளிப்பதை கதவிடுக்கில் எட்டிப்பார்ப்பதுபோல் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

அப்போது, அமுதவாணன் மைக்கை மாட்டுங்க என பிக்பாஸ் குரல் ஒலித்ததும், அவர் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்வதும் வீடியோவில் உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அடச்சீ அமுதவாணன் என பலரும் அமுதவாணனை கடுமையாக விளாசி வருகின்றனர்.

ஆனால் அவர் பாத்ரூமில் இருந்த போட்டியாளர் ஒருவருடன் பேசி கொண்டிருந்ததை ரசிகர்கள் தவறாக புரிந்துகொண்டு பேசிவருவதாக சிலர் கூறுகின்றனர். ஒருவேளை அமுதவாணன் எட்டிப் பார்த்திருந்தால் அவரை ரெட் கார்டு கொடுத்து அனுப்பி விடுங்கள் என பார்வையாளர்கள் கொதிப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Big boss 6

Advertisement
 

Trending

 
Advertisement
To Top