Cinema News
அமீர்- பாவனி இடையில் பற்ற வைத்த பிரியங்கா …வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள், இந்த போட்டியிலும் ஜோடியாக களம் கண்டுள்ளனர். அமீர், பாவனி, வேல்முருகன், ஆர்த்தி கணேஷ், அபிஷேக், ஸ்ருதி, சுஜா வருணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சிக்கான புரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியானது. பிரியங்கா தொகுத்து வழங்கிய அந்த வீடியோவில் தான், கொளுத்தியும் போட்டார். அதாவது, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொண்டே வரும் பிரியங்கா, அபிஷேக், வேல்முருகன் உள்ளிட்டோரிடம் பேசுகிறார். அவர்களைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியே இவர்களுக்காக தான் ஆரம்பிக்கப்பட்டது என அமீர் மற்றும் பாவனியை அறிமுகம் செய்கிறார். அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் ஜோடியாக ஆடுகின்றனர்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
