Connect with us

புதிய நிகழ்ச்சிக்காக புது வித முயற்சியில் இறங்கிய பிக் பாஸ் ராஜு..! வைரல் புகைப்படம்…

Celebrities

புதிய நிகழ்ச்சிக்காக புது வித முயற்சியில் இறங்கிய பிக் பாஸ் ராஜு..! வைரல் புகைப்படம்…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசனில் மக்களின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் டைட்டிலையும் ரூ. 50 லட்சம் பரிசு தொகையையும் தட்டிச் சென்றவர் ராஜு.

Bigg Boss Tamil 5 Grand Finale: Raju Jeyamohan is the winner; Priyanka  becomes first runner up | PINKVILLA

கதைகள் எழுதுவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர் சென்னை வந்து இயக்குனர் பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்படியே விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பெண் வேடம் போட்டு அழகாக ஆளே மாறிய பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன்- செம கியூட் | Bb Fame Raju Jayamohan Girl Getup

இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியே வந்த ராஜுவிற்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது . ஆனால் இப்போது விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அடுத்து ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

இப்படி தொகுப்பாளராக கலக்கி வரும் ராஜு புதிய நிகழ்ச்சிக்காக அசத்தலான பெண் வேடம் போட்டுள்ளார். அதில் அவர் அழகாகவும் காணப்படுகிறார், புகைப்படம் வெளியாக செம சூப்பர் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

பெண் வேடம் போட்டு அழகாக ஆளே மாறிய பிக்பாஸ் புகழ் ராஜு ஜெயமோகன்- செம கியூட் | Bb Fame Raju Jayamohan Girl Getup

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Celebrities

To Top