Connect with us

வைல்ட் கார்ட் என்ட்ரி சஞ்சீவ் சிபி மற்றும் அக்ஷராவை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா..?பிக்பாஸ் டே 52 ரீவ்யு…

Bigboss Tamil 5

வைல்ட் கார்ட் என்ட்ரி சஞ்சீவ் சிபி மற்றும் அக்ஷராவை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா..?பிக்பாஸ் டே 52 ரீவ்யு…

‘கனா காணும் காலங்கள்’ டாஸ்கில் நேற்றைய தினம் சேட்டை செய்தவர்களை கண்டுபிடிக்க நாட்டின் மீது சத்தியம் வாங்க ,உடனே பதறி சக போட்டியாளர்கள் தப்பை ஒத்துக்கொண்டனர்.இன்னும் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி. நிகழ்ச்சித் தொகுப்பாளரின் தோரணையில் சஞ்சீவ் உள்ளே வந்தார்.அவர் என்ன தான் தைரியமாக மற்ற போட்டியாளர்களின் ஆட்டத்தை விமர்சித்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் தெரிந்தது .மேலும் அவரது ஆட்டம் போக போக டான் தெரியும்.

புதுவரவு அமீர் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் ‘டம் டம்’ பாடலுக்கு டான்ஸ் சொல்லித் தருவதின் மூலம் தன் இருப்பை அழுத்தமாக நிரூபித்து விட்டார்.நடனம் ஒன்றாக எல்லாரும் இயல்பா ஆடியது இன்னும் கொஞ்சம் நேரம் ஆகியிருக்கலாம் என தோன்றியது.பின்னர் நடந்த பள்ளி விழாவில் ‘சிறந்த மாணவி’யாக தாமரை தேர்ந்தெடுக்கப்பட்டார்.பல நாள் கழித்து அந்த வீட்டில் அவருக்கு கிடைத்த நல்ல பெயர்.

அதன் பிறகு இறுதியில் ஸ்டைலாக நுழைவதாக நினைத்துக் கொண்டு ஓரமாக நுழைந்தார் சஞ்சீவ்.அதன் பின் ஒவ்வொரு போட்டியாளரின் விளையாட்டை விமர்சித்த சஞ்சீவ் விளையாட்டை இனி வரும் காலங்களில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை இனிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

More in Bigboss Tamil 5

To Top