Connect with us

ரசிகர்களுக்காக புது மாதிரியா வரப்போகும் பிக் பாஸ் சீசன் 6 ..24 மணி நேரமும் பார்க்கலாம்…நியூ ப்ரோமோ இதோ

Big boss 6

ரசிகர்களுக்காக புது மாதிரியா வரப்போகும் பிக் பாஸ் சீசன் 6 ..24 மணி நேரமும் பார்க்கலாம்…நியூ ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மீது ரசிகர்களுக்கு எப்போதும் தனி ஆர்வம் உண்டு. அந்த வகையில் வெள்ளித்திரையில் பல சாதனைகள் படைத்து சின்னத்திரையில் முதல் முறையாக தொகுப்பாளர் அவதாரம் எடுத்த உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

அந்த வகையில் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் திட்டமிட்டபடி நிகழ்ச்சியை தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பிரம்மாண்டமான செட் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கமாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மட்டும் இரவு 1 மணி நேரம் ஒளிப்பரப்பாகும். ஆனால் இந்த முறை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்துவிட முடியும். இந்த இனிப்பான செய்தியை கமல் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி..! 24 மணி நேரம்கூட ஆகல.. அதுக்குள்ள இவ்வளவு வியூஸா?! தெறிக்கவிடும் Badass Leo Das!"

More in Big boss 6

To Top