Connect with us

இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா.. ரசிகர்கள் கணிப்பு பலிக்குமா..?

Big boss 6

இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தானா.. ரசிகர்கள் கணிப்பு பலிக்குமா..?

பிக் பாஸ் வீட்டின் இந்த வார இறுதியை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில பிக்பாஸ் சீசன்கள் டல்லடித்தாலும், இந்த சீசன் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஜிபி முத்து தானாகவே வெளியேறிவிட்ட நிலையில், சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, ஷெரீனா மற்றும் நிவாஷினி ஆகியோர் ஏற்கனவே எலிமினேட் ஆகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் முதல் முறையாக எவிக்சனுக்கு ஓபன் நாமினேஷன் நடந்துள்ளது. அதன்படி இந்த வாரம் அசீம், அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, கதிரவன், ராம் மற்றும் மணிகண்டன் ஆகிய 7 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நீதிமன்றம் டாஸ்க் நடந்து வரும் நிலையில், பல்வேறு பழைய பஞ்சாயத்துகளும் கிளறப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இந்த வார முடிவில் எவிக்ட் ஆகப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரச்சிதாவுக்கு ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வருவதால் அவர் தான் வெளியேறுவார் என கூறப்பட்ட நிலையில், தற்போது குறைந்த வாக்குகள் பெற்று வரும் மணிகண்டன் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Big boss 6

Advertisement
 

Trending

 
Advertisement
To Top