Bigboss Tamil 5
பிக்பாஸ் சீசன் 5 ரீ-யூனியன்..! வைரலாக வலம் வரும் பார்ட்டி போட்டோஸ்…
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மக்களின் பேராதரவை பெற்ற முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதில் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராஜு ஜெயமோகன் ரசிகர்களின் மனம் கவர்ந்து பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவருக்கு அடுத்தபடியான அதிக வாக்குகளை பெற்று பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்தார் .

இந்த பிக்பாஸ் சீசனை தொடர்ந்து புதிய பரிமானதுடன் பிக்பாஸ் அல்டிமேட் என நிகழ்ச்சி தொடங்கி ஹாட் ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது அதில் சீசன் 5 பிரபலங்களான தாமரை மற்றும் நிரூப் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 பிரபலங்கள் அவ்வப்போது சந்தித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் சமீபத்தில் பிரியங்கா, வருண், பாவ்னி, சிபி, அபிஷேக் உள்ளிட்டோர் மீண்டும் சந்தித்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரியங்கா அவரின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
— Priyanka Deshpande (@Priyanka2804) March 10, 2022
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
