Connect with us

30 வருடத்திற்கு மேலாக போராடி என்னை விட்டு சென்றான் என் நண்பன்..பாரதிராஜாவின் நண்பர் நடிகர் பாபு காலமானார்!

Cinema News

30 வருடத்திற்கு மேலாக போராடி என்னை விட்டு சென்றான் என் நண்பன்..பாரதிராஜாவின் நண்பர் நடிகர் பாபு காலமானார்!

இயக்குனர் இமயம் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்…பல படங்களை இயக்கிய இவர் இப்போது முழுவதுமாக நடிகராக உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்..

சமீபத்தில் கூட கருமேகங்கள் கலைக்கின்றன படத்தில் நடித்திருந்தார்…அடுத்ததாக தனது மகன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்துள்ளார்.அதுதான் மார்கழி திங்கள் என்ற காதல் படமாகும்..

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா தனது நண்பன் பாபு மறைவு குறித்து மிகவும் உருக்கமான ஒரு பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் திரைத்துறையில் மிகப்பெரும் நட்சத்திரமாக வந்திருக்கவேண்டியவன் படப்பிடிப்பில் நடந்த விபத்தில் 30 வருடத்திற்கு மேலாக படுக்கையிலேயே தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து மறைந்த என்னுடைய உயிர் தோழன் பாபுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது ஆழ்ந்த இரங்கல் என பதிவு செய்துள்ளார் அவர்.

திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்த பாபு பாரதிராஜாவின் என் உயிர் தோழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அவரின் இழப்பிற்கு அனைவருமே இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஸ்டண்ட் விபத்தினால் முதுகு எலும்பு உடைந்து படுத்தப்படுகையில் இருந்து வந்தார்….கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதனால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்….ஆனால் இன்று அவர் உயிரிழந்துள்ளார்..இது திரையுலகை சேர்ந்த பலருக்கும் மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  டேய் உங்களை நம்பி இறங்கிட்டேன் டா…ஏதாச்சு விளையாடாம பண்ணுங்க..நெல்சன் எடுத்த ஸ்பெஷல் முடிவு!

More in Cinema News

To Top