Connect with us

“31 ஆண்டுகளுக்குப் பிறகு..! மீண்டும் இணைந்த பாரதிராஜா & இளையராஜா கூட்டணி!”

Cinema News

“31 ஆண்டுகளுக்குப் பிறகு..! மீண்டும் இணைந்த பாரதிராஜா & இளையராஜா கூட்டணி!”

உலக அளவில் பிரபலமான மாடர்ன் லவ் வெப் சீரிஸின் இந்திய பதிப்பான மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவை ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து மாடர் லவ் சென்னை என்ற வெப் சீரிஸ் வருகிற மே 18 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

இந்தத் தொடரில் 6 எபிசோடுகளை பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், தியாகராஜன் குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார், ராஜு முருகன் என 6 இயக்குநர்கள் இயக்கியுள்ளார்கள்.

ராஜு முருகனின் லாலாகுண்டா பொம்மைகள் எபிசோடில் ஸ்ரீகௌரி பிரியா, வாசுதேவன் முரளி, வசுந்தராஆகியோர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இமைகள் எபிசோடிற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அசோக் செல்வன், டிஜே பானு நடித்துள்ளனர். கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கிய ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’யில் ரிதுவர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

அக்ஷய் சுந்தர் இயக்கிய மார்கழி எபிசோடுக்கு இளையராஜா இசையமைக்க, சூ கோய் ஷெங், ஸ்ரீகிருஷ்ணா தயார் நடித்துள்ளனர். பாரதிராஜா இயக்கியிருக்கும் பறவை கூட்டில் வாழும் மீன்கள் எபிசோடுக்கு இளையராஜா இசையமைக்க, கிஷோர், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள நினைவோ ஒரு பறவை எபிசோடுக்கு இளையராஜா இசையமைக்க, வாமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  53 வயதில் 'மிரியம்மா' படத்தின் மூலம் கதையின் நாயகியாக மாறிய ரேகா..!

More in Cinema News

To Top