Connect with us

வீல் சேரில் கோபி..ஷாக் ஆன பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள்…இனி வரப்போகும் ட்விஸ்ட்!

Cinema News

வீல் சேரில் கோபி..ஷாக் ஆன பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள்…இனி வரப்போகும் ட்விஸ்ட்!

பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாக்கியலட்சுமி.

2020ம் ஆண்டு ஜுலை 27ம் தேதி இந்த தொடர் தொடங்கப்பட்டது, இதற்கு லீனா மற்றும் சங்கீதா இருவரும் வசனம் மற்றும் கதையை கவனித்து வருகிறார்கள்.

சுசித்ரா, சதீஷ், ரேஷ்மா 3 பேரும் முக்கிய வேடத்தில் நடிக்க சிலர் வெளியேறியும், சிலர் புதியதாக நடிக்கவும் வந்துள்ளனர்.

வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் தற்போது வரை 800 எபிசோடுகளை எட்டிவிட்டது.விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபி எப்போதும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடப்பது போல தான் காட்சிகள் வந்து கொண்டிருக்கிறது.

வீட்டில் ராதிகா மற்றவர்கள் உடன் தொடர்ந்து சண்டை போட்டுவரும் நிலையில், கோபி தினமும் குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடைக்க, அவரது அம்மா தான் சென்று அழைத்து வருகிறார்.

இந்நிலையில் கோபியாக நடித்து வரும் சதிஷ் இன்ஸ்டாகிராமில் தான் வீல்சேரில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்த நெட்டிசன்கள் பாக்கியலட்சுமி சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட் வருகிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.just for fun என குறிப்பிட்டு, நான் நன்றாக தான் இருக்கிறேன் என கோபி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "IND vs AUS: பேட்டிங்கில் அடித்து தூள்கிளப்பிய இந்திய அணி! 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது!"

More in Cinema News

To Top