Connect with us

சவாலான நடிப்பிருக்காக தேசிய விருதை வாங்கிய விஜய்சேதுபதி -வைரல் வீடியோ

Cinema News

சவாலான நடிப்பிருக்காக தேசிய விருதை வாங்கிய விஜய்சேதுபதி -வைரல் வீடியோ

67 வது தேசிய திரைப்பட விருது இன்று டெல்லியில் நடைபெற்றது . அதிலும் குறிப்பாக தென்னிந்திய திரையுலகம் பெரும் அளவில் வெற்றி பெற்றது. தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற விஜய் சேதுபதி, துணை குடியரசு தலைவர் கையில் விருதை வாங்கி கொண்டார் .

Image

மேலும் இவர் தேசிய விருதினை வாங்கி தந்த சூப்பர் delux படத்தில் ஷில்பா என்ற டிரான்ஸ் ஜெண்டராக நடித்து இருந்தார் , இதில் சமந்தா அக்கினேனி, காயத்ரி, ஃபஹத் ஃபாசில் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

Image

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பகிர்ந்து கொண்ட தனுஷ், மனோஜ் பாஜ்பாய், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற இமான் மற்றும் பார்த்திபியன் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்ட மற்ற தமிழ் வெற்றியாளர்களில் அடங்குவர் இது தவிர, வெற்றி மாறனின் ‘அசுரன்’ படத்திற்கும் சிறந்த தமிழ் படம் என விருது வழங்கப்பட்டது.

Image

More in Cinema News

To Top