Connect with us

ஜனனிக்காக.. பிக்பாஸ் வீட்டிற்குள் போய் விக்ரமனை எட்டி உதைத்த நடிகர் விஜய்? வைரலாகும் வீடியோ!!

Big boss 6

ஜனனிக்காக.. பிக்பாஸ் வீட்டிற்குள் போய் விக்ரமனை எட்டி உதைத்த நடிகர் விஜய்? வைரலாகும் வீடியோ!!

பிக்பாஸ் வீட்டில் விக்ரமன் கூறிய கருத்தால் கதறி கதறி அழுத்த ஜனனிக்காக நடிகர் விஜய், பிக்பாஸ் வீட்டிற்கே போய் விக்ரமனை எட்டி உதைத்த மீம்ஸ் வீடியோ தீயாய் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் சிறப்பாக செயல்படாத ஒருவரை தேர்வு செய்து சொல்ல பிக்பாஸ் சொன்னபோது, விக்ரமன் உடனே ஜனனியின் பெயரைக் கூறியிருந்தார். ஜனனி டிபென்டன்டாக இருக்கிறாரோனு தோனுது என விக்ரம் கூறிய நிலையில், அதை கேட்ட ஜனனி கதறி அழுதார்.

என்னை விடுங்கோ, நான் கிளம்புறேன் என அவர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய நிலையில், அவர் அழுததை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை தெறிக்கவிட்டனர். விக்ரமனுக்கு ஆதரவாக ஒரு சாராரும், ஜனனிக்கு ஆதரவாக இரு சாராரும் களமிறங்கி மீம்ஸ்கள் மூலம் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் பார்ட்டியில் குழந்தையை தூக்கி மேலே வீசி வீசி விளையாடும்போது குழந்தை அழுவதால் கோபப்பட்டு விஜய், எட்டி உதைக்கும் வீடியோவை எடிட் செய்து, அந்த குழந்தையாக ஜனனியையும், தூக்கி வீசுபவராக விக்ரமனையும் வைத்து சூப்பராக எடிட் செய்துள்ளார்கள்.

இதில் விக்ரமனை எட்டி உதைத்து ஜனனியை விஜய் காப்பாற்றுவதை போல் வைத்து கலாய்த்துள்ளனர். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து நம்ம ஜனனிக்காக நடிகர் விஜயே பிக்பாஸ் வீட்டிற்குள் போய் விக்ரமனை நொங்கெடுத்து விட்டார் என நக்கலடித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை பூஜா ஹெட்ஜின் மஞ்சள் நிற சேலையில் Cute போட்டோஷூட்!

More in Big boss 6

To Top