Connect with us

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூண்டோடு டிஸ்மிஸ்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

India match

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூண்டோடு டிஸ்மிஸ்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

சேத்தன் சர்மா தலைமையிலான மூத்த தேசிய தேர்வுக் குழுவை பிசிசிஐ தடாலடியாக நீக்கியுள்ளது. மேலும் பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தேசிய தேர்வாளர் பதவிக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

“இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய தேர்வாளர்கள் (மூத்த ஆண்கள்) பதவிக்கு விண்ணப்பங்களை அழைக்கிறது. அந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் தங்கள் விண்ணப்பங்களை பரிசீலிக்க பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று பிசிசிஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ விண்ணப்பங்களுக்கான அளவுகோல்களையும் பட்டியலிட்டுள்ளது. 5 பதவிகள் காலியிடங்களாக உள்ளதாக அறிவித்துள்ளது. 7 டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் வகுப்பு போட்டிகள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகள் விளையாடியிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

எனினும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பே விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. “எந்தவொரு கிரிக்கெட் கமிட்டியிலும் (பி.சி.சி.ஐ-யின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி) மொத்தம் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நபரும் ஆண்கள் தேர்வுக் குழுவில் உறுப்பினராகத் தகுதி பெற மாட்டார்கள். விண்ணப்பங்கள் நவம்பர் 28, 2022 1800 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

2022 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் வீழ்ந்தது. அதில் மிகப்பெரிய ஏமாற்றம் என்னவென்றால், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அரையிறுதியில் வெளியேறியதைத் தொடர்ந்து, பல வீரர்கள் ஃபார்மில் இல்லாத நிலையிலும் அணி தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

மொத்தத்தில் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் ஓட்டம் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான வெற்றிகள், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்திற்கு எதிரான நெருங்கிய வெற்றிகள் மற்றும் பெரிய அணிகளான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு தோல்விகளை உள்ளடக்கியது.

இது மட்டுமின்றி, பந்தின் கையாளுதல், சாஹல் பிளேயிங் 11’இல் முழுமையாக இல்லாதது, பகுதி நேர பந்துவீச்சாளர்கள் இல்லாதது மற்றும் பவர்பிளேயின் போது பேட்டிங் செய்யும் விதம் மற்றும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. இதையடுத்து டி20 கிரிக்கெட் வடிவத்தில் பிசிசிஐ மிகப்பெரிய சீர்திருத்தத்திற்கு தயாராகி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது முதல் ஆப்பு தேர்வுக் குழுவுக்கு வந்தது.

இந்தியா கடைசியாக 2013 இல் எம்எஸ் தோனியின் தலைமையில் ஒரு ஐசிசி போட்டியை வென்றது. அதன் பின்னர் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in India match

Advertisement
 

Trending

 
Advertisement
To Top