Connect with us

BBReview :கமல் மாதிரி ரம்யாகிருஷ்ணன் நடுநிலையில்லையா..?ஏன் இந்த விஷயத்த கேட்கல…

Bigboss Tamil 5

BBReview :கமல் மாதிரி ரம்யாகிருஷ்ணன் நடுநிலையில்லையா..?ஏன் இந்த விஷயத்த கேட்கல…

பிரியங்காவை முதல் முறையாக வாயடைத்து போக வைத்த நேற்றைய எபிசோட் . உண்மையில் நிரூப் பிரியங்கா நண்பர்கள்தானா என்பதில் தாமரைக்கு எழுந்த கேள்விதான் அனைத்திற்கும் காரணம். மேலும் தாமரை பிரியங்காவை பார்த்து தான் தலைவியாக இருக்க தகுதி இல்லாதது என நீ எப்படி சொல்லாம் கேட்க ப்ரியங்காவுக்கு மூச்சு கூட வரல.இத்தனை நாள் கமலை பார்த்து தாமரை பயத்தோடு பேசாம விற்றுப்பார் போல.நேற்றைய எபிசோடில் பொங்கிட்டார்.

அடுத்ததாக சஞ்சீவுக்கான ஸ்பெஷல் டாஸ்க். வீட்டில் இருப்பவர்களுக்கு ரேங்க் அடிப்படையில் பேட்ச் கொடுப்பது. எவ்வளவு துல்லியமாகக் கணிக்க முடியுமோ அந்த அளவிற்கு மிகவும் அழகாகவே கணித்து அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகவும் சிறப்பாகவே செய்தார். இதையடுத்து, ஆசிரியர்களுக்கான திருக்குறள் டாஸ்க்.ராஜு சிபியை பழிவாங்குனா கூட அக்ஷரா இவ்வளவு சந்தோசம் பற்றுக்க மாட்டார் அந்த அளவுக்கு சந்தோசம்.

இரண்டு குறள்களைத் திணறிச் சொல்லி அதிகப்படியான குறள்களை கூறிய புலவர் பட்டத்திற்கு சொந்தக்காரரானார் .திருக்குறளோடு விட்டார்களா? போகிற போக்கில் அக்ஷரா தெலுங்கில் டயலாக் சொல்லுகிறேன் அதை சொல்லுங்க என்று ராஜுவிடம் சொன்னதையே ஒரு டாஸ்க்காக வைத்து, ராஜூவை படுத்தி எடுத்துவிட்டனர்.

அதன் பின் இறுதியாக நாமினேஷன் ஆன பாவனி, இமான், தாமரை ஆகியோர் காப்பாற்றப்பட்டதை அறிய முடிந்தது. நிரூப் மற்றும் ஐக்கி மட்டுமே பாக்கி.அதில் இறுதியாக ரம்யாகிருஷ்ணன் ஜக்கி evict என அதிகாரபூர்வமாக காட்டினார்.ராஜு அபிநயிடம் அவர் பாவனியைக் காதலிக்கிறார் என்று கேள்வி கேட்டது சரியா தவறா என்பதுதான். ஆனால், அதைப்பற்றி ராஜமாதா எதுவும் கேட்காமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை. மறந்திருக்க வாய்ப்பில்லையே! சரி கடந்தது கடந்துவிட்டது. சீக்ரெட் அறையை ஐக்கி பயன்படுத்துவார் என்று எதிர்பார்த்தோம் ஆனால், அதனுவும் நடக்கவில்லை.

More in Bigboss Tamil 5

To Top