Connect with us

“கார்த்தியை டார்ச்சர் செய்கிறாராம் மனைவி ரஞ்சினி! பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்!”

Cinema News

“கார்த்தியை டார்ச்சர் செய்கிறாராம் மனைவி ரஞ்சினி! பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்!”

பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து பேசி சர்ச்சைகளில் சிக்கி வரும் நடிகரும் மூத்த பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகர் கார்த்தியை அவரது மனைவி ரஞ்சினி சின்னஸ்வாமி டார்ச்சர் செய்து வருவதாக புதிய வீடியோ ஒன்றில் பேசி பரபரப்பை கூட்டி உள்ளார். கடந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என மாஸ் காட்டிய கார்த்தி இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2விலும் கெத்துக் காட்டி உள்ளார். எம்ஜிஆர், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் மிஸ் செய்த வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்த கார்த்திக்கு வீட்டில் மனைவியால் டார்ச்சர் ஏற்பட்டுள்ளதாக பேசி பயில்வான் ரங்கநாதன் பகீர் கிளப்பி உள்ளார்.

நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தில் கமிட் ஆனாலே அந்த படத்தை இயக்கும் இயக்குநருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அது மாறுவது மட்டுமின்றி டாப் ஹீரோக்களை இயக்கும் வாய்ப்பும் வீடு தேடி வருகிறது. பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனும் நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தியை வைத்து படம் இயக்கிய பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், எச். வினோத் எல்லாம் இன்றைக்கு தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களாக வலம் வருகின்றனர். பொன்னியின் செல்வன் நாவலில் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரம் தான் உண்மையிலேயே கதையின் நாயகனாக வலம் வரும்.

வீராணம் ஏரியில் தொடங்கி ஆதித்த கரிகாலனின் மரணம், குந்தவையின் கரம் பற்றுவது வரை அந்த கதாபாத்திரம் மெயின் ஹீரோவாகவே எழுதப்பட்டிருக்கும். இயக்குநர் மணிரத்னமும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்துக்கு ஆரம்பத்தில் விஜய்யை வைத்து இயக்க நினைத்து அது முடியாமல் போக கடைசியில் கார்த்தியை கச்சிதமாக தேர்வு செய்து நடிக்க வைக்க அவரும் தனது தேர்ந்த நடிப்பால் மாஸ் காட்டி உள்ளார். ஜப்பான் படத்தில் நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக நலன் குமாரசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் சத்தமே இல்லாமல் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் கார்த்தி பற்றியும் அவரது மனைவி குறித்தும் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேசிய வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்த நிலையில், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா என அனைத்து ஹீரோயின்களுடன் ஜொள்ளு விட்டுப் பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும். மேலும், நடிகை த்ரிஷாவுடன் அகநக பாடல் காட்சியில் செம ரொமான்டிக்காக கார்த்தி நடித்ததை பார்த்து அவரது மனைவி ரஞ்சினிக்கு பொறாமை ஏற்பட்டு இப்படியெல்லாம் ஏன் நடிக்கிறீங்க, உங்க அண்ணன் சூர்யா சில படங்களில் ஹீரோயினே இல்லாமல் நடிப்பது போல நீங்களும் நடிக்கலாமே என அவரை டார்ச்சர் செய்ததாக பேசி உள்ளார்.

See also  நடிகை லாவண்யா வருண் தேஜ் திருமண நிச்சயதார்த்தம்..எங்கு எப்போது???

சினிமா நடிகர்களின் மனைவிகள் பலரும் தங்கள் கணவர் இன்னொரு நடிகையுடன் ஒட்டி உறவாடி, முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என படத்திற்காக நடிக்க வேண்டிய நிலையில், மனதளவில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழல் வரத்தான் செய்யும் என்றும் நடிகர்கள் எந்த அளவுக்கு தங்கள் மனைவியிடம் உண்மையாக இருக்கின்றனரோ அவர்கள் இடையே எந்தவொரு சண்டையும் நடக்காது என்றும் கூறியுள்ளார். நடிகர் கார்த்தி ரஞ்சினியை 2011ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு கந்தன் மற்றும் உமையாள் என இரு குழந்தைகள் உள்ளனர்.

இதுவரை பெரிதாக எந்தவொரு சர்ச்சையிலும் நடிகர் கார்த்தி சிக்காத நிலையில், தேவையில்லாமல் அவரையும் அவர் மனைவி பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பேசுவது சரியல்ல என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் விளாசி வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் 2, அலெக்ஸ் பாண்டியன், விருமன் என எல்லா படங்களிலும் ஹீரோயினுடன் நெருக்கமாகத்தான் கார்த்தி நடித்து வருகிறார். ஆனால், இதுவரை அவரது மனைவி எந்த பிரச்சனையும் பண்ணாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நெருக்கமாக கூட நடிக்காத நிலையில், டார்ச்சர் செய்கிறாரா என விளாசி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top