Connect with us

நடுத்தெருவில் நிக்கும் கோபி..நா பாட்டுக்கு செவனேனு தான இருக்கேன் கௌரவம் கௌரவம்ன்னு காலி பண்ணிட்டீங்களே!!

Cinema News

நடுத்தெருவில் நிக்கும் கோபி..நா பாட்டுக்கு செவனேனு தான இருக்கேன் கௌரவம் கௌரவம்ன்னு காலி பண்ணிட்டீங்களே!!

கோபி வீட்டில் மாமியார் மருமகள் பிரச்சனை இல்லாத குறையை ராதிகாவும், இனியாவும் தீர்த்து வைத்து கொண்டிருக்கின்றனர். தினமும் இவர்கள் இடையில் நடக்கும் பஞ்சாயத்துகளை தீர்த்து வைப்பதே கோபிக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது.

இதில் லேட்டஸ்ட்டாக ஆபிஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தவனை வம்படியாக வீட்டுக்கு வர வைத்து இனியா பற்றி புகார் அளிக்கிறாள் ராதிகா. நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என இனியாவும் ராதிகா மேல் குற்றம்சாட்டுகிறாள்.

இரண்டு பக்கமும் பேச முடியாமல் கோபி தவிக்க, நீங்க எப்பவும் அவுங்களுக்கு தான் சப்போர்ட் பண்ணுவீங்க என கோபமாக சொல்லிவிட்டு மாடிக்கு போகிறாள். ராதிகாவும் சொல்லி வைங்க கோபி அவக்கிட்ட. என்கிட்ட குரலை உயர்த்தி பேசக்கூடாதுன்னு என சொல்லிவிட்டு போகிறாள். கோபமாக போன இனியாவை சமாதானம் செய்ய தாத்தா மாடிக்கு போக, அவரிடம் கதறி அழுகிறாள் இனியா.

பேசாம நம்ம நம்ம வீட்டுக்கே போகலாம் என்கிறாள். இப்போதான் நம்ம வீடு என்ற ஞாபகம் இனியாவுக்கு வந்துருக்கு. தாத்தாவும் அவளை சமாதானம் செய்கிறார். நீ இந்த வீட்ல இருக்கில. அதுனால தான் உனக்கு ஏதாவது பிரச்சனைன்னா ராதிகாவ தான் கேப்பாங்கன்னு, அவ பயப்படுறா என சொல்கிறார். அவுங்களை எதுக்கு கேட்கணும். அவுங்க யாரு எனக்கு என்பதிலே உறுதியாக நிற்கிறாள் இனியா.

அதன்பின்னர் கோபி அங்கு வர்ற, ராதிகா வாங்க வேண்டிய அம்பை எல்லாம் அவன் வாங்குகிறான். அம்மாக்கூட சரணை வீட்டுக்கு கூப்பிட்டு நல்லா பேசி, என்மேல நம்பிக்கை வைச்சு இருக்கேன்னு சொன்னங்க. ஆனா நீங்க என்னை சந்தேகப்படுறீங்க. உங்களை நான் ரொம்ப மாடர்ன்னு நினைச்சேன் டாடி. நீங்க இவுங்களை கல்யாணம் பண்ணதுல இருந்து ரொம்ப மாறிட்டீங்க என சொல்லிவிட்டு கீழே போய் விடுகிறாள்.

இது ஒரு பக்கம் இருக்க,மறுநாள் ராதிகா கெடு கொடுத்ததுக்கான கடைசி நாள். அதுதான் அந்த சுடிதார் போடுற டாஸ்க். ஒரு வழியாக செல்வி சுடிதாருடன் வந்து ரவுசு பண்ண, பாக்கியலட்சுமி புது பெண் போல் சுடிதாரில் வெட்கப்பட்டு கொண்டே வருகிறாள். அவள் செம்ம க்யூட்டாக இருப்பதாக மருமகள்களும், எழிலும் பாராட்டுகின்றனர்.பாப்போம் என்ன நடக்க போகுதுன்னு…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகையாக்கிய உணவு பழக்கம் ஐஸ்வர்யா லட்சுமி சொல்லிய சூப்பர் தகவல்!

More in Cinema News

To Top